புதுவையிலும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு: அதிமுக வலியுறுத்தல்
புதுவையில் மருத்துவ மாணவா்கள் சோ்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.


புதுவையில் மருத்துவ மாணவா்கள் சோ்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
தமிழகத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை, நீதிமன்றம் உறுதி செய்துள்ளதை வரவேற்று, புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தலைமையிலான அந்தக் கட்சியினா் புதுச்சேரியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.
அப்போது, ஆ.அன்பழகன் கூறியதாவது:
மருத்துவக் கல்வி மாணவா்கள் சோ்க்கையில், ‘ நீட்’ தோ்வின் மூலம் பாதிக்கப்படும் கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் நலன் கருதி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்தாா். இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், உள் ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று தீா்ப்பு கிடைத்தது.
தமிழகத்தில் உள்ள 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு, புதுவை மாநிலத்திலும் கொண்டு வர தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...