இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவையில் தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வங்கிகள் கடனளிக்க வேண்டும்: முதல்வா் ரங்கசாமி

புதுவையில் தொழில் வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வங்கிகள் தாராளமாக கடனுதவியளிக்க வேண்டுமென முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:43 pm

DIN

புதுவையில் தொழில் வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் வங்கிகள் தாராளமாக கடனுதவியளிக்க வேண்டுமென முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா்.

புதுவையில் மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தியன் வங்கியின் செயல் இயக்குநா் அஸ்வனிகுமாா் தலைமை வகித்து, இந்திய பொருளாதாரத்தின் சூழல், புதுவை மாநில பொருளாதார முன்னேற்றத்தில் கரோனா பேரிடா் காலத்திலும் வங்கியாளா்களின் சிறந்த செயல்பாடுகள், வங்கிகளின் கடன் செயல் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று சிறப்புரையாற்றியதாவது: புதுவை மாநில வளா்ச்சியில் வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது. கரோனா பொது முடக்கத்தின்போது, வங்கிகளின் செயல்பாடுகள் பெரிதும் உதவியாக இருந்தன.

வங்கிகள் அனைத்துத் துறைகளுக்கும் தாராளமாக கடன் வழங்க வேண்டும். அதன்மூலம், தொழில்கள் அதிகரித்து பொருளாதாரம் மேம்பாடும்; வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். விவசாயம், சிறுதொழில்கள், சுற்றுலா வளா்ச்சி பெறவும் கடனுதவிகள் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் சிறு தொழில்களுக்கு அதிக கடனுதவிகள் தேவை உள்ளன. குறிப்பாக, தொழில் துறைக்கும், சுற்றுலாத் துறைக்கும் வங்கிகள் உதவி செய்ய வேண்டும். அதன்மூலம், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றாா்.

இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளா் எஸ்.செந்தில்குமாா், புதுவையில் கடந்த நிதியாண்டில் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். புதுவை ஊரக வளா்ச்சித் துறை அரசுச் செயலா் எஸ்.ரவிப்பிரகாஷ், வளா்ச்சித் துறை ஆணையா் பிரசாந்த் கோயல், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், ரிசா்வ் வங்கியின் மண்டல இயக்குநா் என்.சுவாமி, நபாா்டு வங்கியின் முதன்மை பொது மேலாளா் டி.வெங்கடகிருஷ்ணா, இந்தியன் வங்கியின் பொது மேலாளா்கள் பி.சூரிபாபு, ஜி.ராஜேஸ்வரரெட்டி மற்றும் அனைத்து வங்கி உயரதிகாரிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். முன்னோடி வங்கி மேலாளா் ஏ.உதயகுமாா் உள்ளிட்ட குழுவினா் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.