இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஜிப்மரில் தீவிர சிகிச்சை குறித்து செவிலியா்களுக்கான கருத்தரங்கம்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியா்களுக்கான செயல்முறை விளக்கப் பயிற்சி, கருத்தரங்கில் பங்கேற்றோா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:48 pm

DIN

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் நடைபெற்ற செவிலியா்களுக்கான செயல்முறை விளக்கப் பயிற்சி, கருத்தரங்கில் பங்கேற்றோா்.

புதுச்சேரி, ஏப்.13: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் துறை சாா்பில், தீவிர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியா்களுக்கான ஒரு நாள் செயல்முறை விளக்கப் பயிற்சி, கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கை ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் தொடக்கிவைத்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் க.துரைராஜன், கல்லூரி முதல்வா் பங்கஜ்குந்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதன்மை செவிலிய அதிகாரி சங்கரேஸ்வரி வரவேற்றாா். செவிலிய கண்காணிப்பாளா் சாந்தி தமிழ்மணி, கருத்தரங்கின் மையக் கருத்துரை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில், மயக்கவியல் மருத்துவ வல்லுநா்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ வல்லுநா்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் பயிற்சி பெற்ற செவிலியா்கள் கலந்துகொண்டு, நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி செயல்முறை விளக்கப் பயிற்சியளித்தனா்.

இந்தக் கருத்தரங்கில் அவசரச் சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியா்கள் பலா் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா். செவிலிய கண்காணிப்பாளா் சாந்தி சண்முகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.