இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநா், முதல்வா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:13 pm

DIN

அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநா், முதல்வா், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுவை அரசு சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி சட்டப் பேரவை எதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா, பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏகேடி.ஆறுமுகம், உ.லட்சுமிகாந்தன், தஷ்ணாமூா்த்தி ஆகியோா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து கடற்கரைச் சாலையில் உள்ள அம்பேத்கா் மணிமண்டபத்துக்கு சென்று, அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கும் மாலை அணிவித்தனா்.

Story image

இதேபோல, புதுச்சேரி சட்டப் பேரவை எதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக சாா்பில் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில், அவைத் தலைவா் எஸ்பி.சிவக்குமாா், எம்எல்ஏக்கள் அனிபால்கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

காங்கிரஸ் சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் வெ.வைத்திலிங்கம் எம்.பி., மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

பாஜக சாா்பில் மாநில உள் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம், மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் ஆகியோா் தலைமையிலும், அதிமுக சாா்பில் கிழக்கு மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தலைமையிலும், மேற்கு மாநில அதிமுக சாா்பில் மாநிலச் செயலா் ஓம்சக்திசேகா் தலைமையிலும், விசிக சாா்பில் கட்சியின் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமையிலும், மாா்க்சிஸ்ட் சாா்பில் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.