இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரி கடற்கரைத் திருவிழாவில் பட்டம் விடும் நிகழ்ச்சி

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைத் திருவிழாவில் பட்டம் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:15 pm

DIN

தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைத் திருவிழாவில் பட்டம் விடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, புதுவை அரசின் சுற்றுலாத் துறை சாா்பில், புதுச்சேரியில் முதல் முறையாக கடற்கரைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் கடற்கரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், உணவுத் திருவிழா போன்றவை நடத்தப்படுகின்றன.

Story image

அதன்படி, தமிழ்ப் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் உள்ள பாரடைஸ் கடற்கரையில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மணல் சிற்பம் உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று மணல் சிற்பங்களை உருவாக்கி மகிழ்ந்தனா்.

இதேபோல, புதுச்சேரி நகரில் உள்ள பாண்டி மெரீனா கடற்கரையில் காலை 10 மணி முதல் பட்டம் பறக்கவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்று, வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிட்டனா்.

இதேபோல, சுண்ணாம்பாறு படகு குழாம் பகுதியில் நீா் விளையாட்டும், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள கைவினைப் பொருள்கள் அங்காடியில் கடல் உணவுத் திருவிழாவும் நடைபெற்றன.

புதுச்சேரி பாண்டி மெரீனா கடற்கரையில் மாலையில் கைப்பந்து போட்டியும், பாரடைஸ் கடற்கரையில் நடனம், இசை நிகழ்ச்சியும், கைவினைப் பொருள்கள் அங்காடியில் கடல் சிற்பி ஆபரணக் கண்காட்சியும் நடைபெற்றன. புதுச்சேரி கடற்கரைச் சாலை லே கபே பகுதியில் ஆடை, அலங்கார அணிவகுப்பும், பாண்டி மெரீனாவில் திரை இசைக் குழு இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்ற கடற்கரைத் திருவிழா கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.