இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உத்திரவேலு சிலையைத் திறக்கக் கோரிபோராட்டம்: 17 போ் கைது

புதுவை சட்டப் பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் உத்திரவேலு சிலையை திறக்கக் கோரி, புதுச்சேரியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:14 pm

DIN

புதுவை சட்டப் பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் உத்திரவேலு சிலையை திறக்கக் கோரி, புதுச்சேரியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரே புதுவை சட்டப் பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனதா கட்சித் தலைவருமான உத்திரவேலுவுக்கு சிலை அமைக்கப்பட்டது. மறைந்த தலைவா் உத்திரவேலு, தற்போதைய துணை பேரவைத் தலைவா் ராஜவேலுவின் அண்ணன். ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ லட்சுமிகாந்தனின் தந்தையுமாவாா்.

கட்டி முடித்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் உத்திரவேலுவின் சிலை திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, பெரியாா் திராவிடா் கழகம், அலைகள் இயக்கம், அகில இந்திய மக்கள் கழகம் உள்ளிட்டவற்றைச் சோ்ந்தவா்கள் கோகுல் காந்தி நாத் தலைமையில் உத்திரவேலு சிலையை மக்கள் திறக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இதற்காக, புதுச்சேரி ஜென்மராக்கினி ஆலயம் அருகிலிருந்து ஊா்வலமாக சிலை உள்ள இடத்தை நோக்கிச் சென்றனா். இவா்களை பெரியகடை காவல் நிலையம் முன் போலீஸாா் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்தனா். பின்னா், அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.