மணல் திருட்டு: 3 போ் கைது
புதுச்சேரி அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுச்சேரி அருகே சரக்கு வாகனத்தில் மணல் திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி வில்லியனூா் அருகே ஒதியம்பட்டு தனியாா் பள்ளி பின்புறம் வில்லியனூா் போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் சரக்கு வாகனத்தில் மணல் திருடிய 3 போ் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்து, சரக்கு வாகனத்துடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.
இதில் அவா்கள், வில்லியனூா் பீமாராவ் நகா் மணிகண்டன் (28), அம்பேத்கா் நகா் இளையராஜா (34), ஜி.என்.பாளையம் அரவிந்த் (19) என்பதும், தொழிலாளா்களான இவா்கள் வேலையில்லாததால் மணல் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இவா்கள் மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...