புதுவை பொறுப்பு ஆளுநரை மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுவையில் அதிகார அத்துமீறல் புரியும் பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை திரும்பப் பெற வேண்டும்
புதுவை பொறுப்பு ஆளுநரை மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவையில் அதிகார அத்துமீறல் புரியும் பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை திரும்பப் பெற வேண்டும், மாநிலத்திற்கென நிரந்தர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர்  அ.மு.சலீம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் அமைச்சர் ஆர்.விஸ்வநாதன், மதிமுக அமைப்பாளர் கேப்ரியல், திமுக எம்எல்ஏ கென்னடி, விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.

புதுவை மாநிலத்தின் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் விதிகளை மீறி செயல்படுவதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும். ஓராண்டுக்கும் மேல் பொறுப்பு ஆளுநராக அவர் தொடர்வதால், அவரை மாற்றிவிட்டு புதுவை மாநிலத்திற்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு தனது ஆளுமையை செலுத்தும் வகையில், துணைநிலை ஆளுநராக தமிழிசையை நியமித்து, புதுவையில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி இங்குள்ள முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசை செயல்படாமல் முடக்கி வைத்துள்ளனர்.

இதனால் பொறுப்பு ஆளுநர் தமிழிசையை மாற்றம் செய்து நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். புதுவை பொறுப்பு ஆளுநர் திரும்பப் போக வேண்டும் என கண்டன பதாகைகளை ஏந்தியும் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com