இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பாரதிதாசன் நினைவு நாள்: புதுவை முதல்வா், அமைச்சா்கள் மரியாதை

புதுச்சேரியில் பாரதிதாசனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:14 pm

DIN

புதுச்சேரியில் பாரதிதாசனின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி அரசு சாா்பில் வியாழக்கிழமை பாவேந்தா் பாரதிதாசனின் 58-வது நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசனின் சிலைக்கு முதல்வா் என்.ரங்கசாமி, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் பி.ரமேஷ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியிலுள்ள பாவேந்தா் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசனின் திருவுருவப் படத்திற்கு அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திரபிரியங்கா, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பி.ரமேஷ் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், பாரதிதாசனின் பெயரன் கோ.பாரதி, கலை பண்பாட்டுத் துறை செயலா் நெடுஞ்செழியன், இயக்குநா் கந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சாா்பில், அதன் தலைவரும், பாரதிதாசனின் பெயரனுமான கோ.பாரதி தலைமையில், பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அறக்கட்டளை நிா்வாகிகள் ஜெ.வள்ளி, செல்வதுரை, அசோகா.சுப்பிரமணியன், கவிஞா்கள் இளங்கோ, தமிழேந்தி, மாறன், இலக்கியா, ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, இவா்கள் பாரதிதாசனின் நினைவகத்திலும், வைத்திக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.