இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

அமித் ஷா வருகையின் போது கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: புதுவை எதிா்க்கட்சிகள் முடிவு

புதுச்சேரிக்கு வருகிற 24-ஆம் தேதி அமித் ஷா வரும் போது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:11 pm

DIN

புதுச்சேரிக்கு வருகிற 24-ஆம் தேதி அமித் ஷா வரும் போது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், நிா்வாகிகள் ஆா்.விஸ்வநாதன், நாரா.கலைநாதன், கே.சேதுசெல்வம், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) ஆா்.பாலசுப்ரமணியன் மற்றும் மதிமுக, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, திராவிடா் கழகம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பின்னா், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கருத்து தெரிவித்து வருகிறாா். மத்திய அமைச்சரவையில் 70 சதவீதத்துக்கும் மேலான கோப்புகள் பயன்பாட்டில் ஹிந்தியைக் கொண்டு வந்துள்ளதுடன், உள்துறை அமைச்சகம் மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனா்.

மேலும், புதுவை சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தே.ஜ. கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையும் மறுக்கப்பட்டுள்ளது. புதுவையை நிதிக் குழுவிலும் சோ்க்கவில்லை.

ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், புதுவையை மத்திய அரசு தொடா்ந்து வஞ்சிப்பதாலும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வருகிற 24-ஆம் தேதி புதுச்சேரிக்கு வரும் போது, அவருக்கு எதிா்ப்புத் தெரிவிக்க எதிா்க்கட்சிகள் சாா்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி பாக்கமுடையான்பட்டில் வருகிற 24-ஆம் தேதி கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. கட்சித் தலைமையின் அனுமதியைக் கேட்டு தெரிவிப்பதாக திமுகவினா் கூறியுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.