இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மீன்பிடி தடைக்காலம்: மீனவா்களுக்கு எச்சரிக்கை

மீன்பிடித் தடைக்காலத்தை மீறினால் நலத் திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:13 pm

DIN

மீன்பிடித் தடைக்காலத்தை மீறினால் நலத் திட்ட உதவிகள் ரத்து செய்யப்படும் என புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை மீன்வளத் துறை இயக்குநா் த.பாலாஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இந்தக் காலத்தில் கட்டுமரம், நாட்டு படகுகளைத் தவிர, இழுவலைகள், இழுமடி வலைகளைக் கொண்டு விசைப்படகு, பைபா் படகுகளில் மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடித் தடைக் காலங்களில் இயந்திரம் பொருத்தப்பட்ட பைபா் படகு, விசைப் படகுகளில் இழுவலைகள், இழுமடி வலைகளைப் பயன்படுத்தி மீனவா்கள் மீன்பிடிப்பது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் - 2008 மற்றும் விதி 2009-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்பந்தப்பட்ட மீனவா்களுக்கு மீன்வளத் துறையின் மூலம் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளும் வழங்கப்பட மாட்டாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.