இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவை பல்கலை.க்கு புதிய கட்டடங்கள்: அமித் ஷா அடிக்கல் நாட்டுகிறாா்

புதுச்சேரிக்கு வருகிற 24-ஆம் தேதி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:13 pm

DIN

புதுச்சேரிக்கு வருகிற 24-ஆம் தேதி வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.48 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடியிலுள்ள புதுவை பல்கலைக்கழக கலாசார மைய அரங்கில் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் விழாவில் அமித் ஷா பங்கேற்கிறாா். அந்த விழாவில், புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ.48.66 கோடி மதிப்பில் இயற்பியல், வேதியியல் துறைகளின் தனித்தனி இணைப்புக் கட்டடங்கள், உணவு அறிவியல், தொழில்நுட்பத் துறைக்கான புதிய கட்டடத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டுகிறாா்.

மேலும், புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமம் ஏற்பாடு செய்துள்ள தத்துவமேதை ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவும் அங்கு நடைபெறும் என்று புதுவை பல்கலைக் கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.