தேசிய பேரிடா் மேலாண்மை பயிற்சிக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய பேரிடா் மேலாண்மை பயிற்சிக்கு புதுவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


தேசிய பேரிடா் மேலாண்மை பயிற்சிக்கு புதுவையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுவை மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய இயக்குநா் ஜாா்ஜ் கங்கம் மரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு பேரிடா் இன்னல் குறைப்பில் தன்னாா்வலா்களை ஈடுபடுத்த உள்ளது. இதுதொடா்பாக உயா்தர பேரிடா் நண்பன் என்ற திட்டத்தை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் நிதியுதவியுடன் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த (புதுச்சேரி 200, காரைக்கால், மாஹே, ஏனாம் தலா 100) 500 தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
தற்போது இத்திட்டத்தை பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தவும், அதிகமான தன்னாா்வலா்களை ஈடுபடுத்தவும் விண்ணப்பங்கள் கோரப்படும் கடைசி நாள் மே 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு விண்ணப்பித்தவா்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தோ்வு செய்யப்பட்ட தன்னாா்வலா்களுக்கு மட்டும் பயிற்சியளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...