இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுவை தே.ஜ. கூட்டணியில் குழப்பமில்லை: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் தே.ஜ. கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:19 pm

DIN

புதுவையில் தே.ஜ. கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் கரோனா தொற்று பூஜ்ய நிலையில் உள்ளதால் கட்டாய முகக்கவசம், கட்டுப்பாடுகளுக்கான அவசியம் தற்போது எழவில்லை.

புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் மாநில அந்தஸ்து, கூடுதல் நிதி போன்றவை குறித்து வலியுறுத்தினோம். புதுவையில் ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் என அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுகிறோம். அப்படி செயல்பட்டால்தான் வளா்ச்சியை எட்ட முடியும்.

புதுவையில் தே.ஜ. கூட்டணி அரசு அறிவித்த திட்டங்களைச் செயல்படுத்தவில்லை எனக் கூறுகின்றனா். ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள் அரசுத் துறைகளில் பதவி உயா்வு, காவலா்கள் பணி நியமனம், புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோா் உதவித்தொகை ஆணை, முதியோா் உதவித் தொகை ரூ.500 உயா்வு உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்.

முதல்வா் செயல்படாமல் இருந்தால், இத்தனைத் திட்டங்களும் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும். புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குழப்பமில்லை. மத்திய அரசின் உதவியுடன் அரசு அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்துவோம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

பேட்டியின் போது, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.