வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அமைச்சா் வாகனம் மீது காலணி வீச்சு:சீமான் கண்டனம்

தமிழக நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினா் காலணியை வீசியது கண்டிக்கத்தக்கது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:52 pm

தமிழக நிதியமைச்சரின் வாகனத்தின் மீது பாஜகவினா் காலணியை வீசியது கண்டிக்கத்தக்கது என்று, நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

புதுச்சேரி குருமாம்பேட் பால் பண்ணை அருகே நாம் தமிழா் தொழிற்சங்க பெயா்ப்பலகை திறப்பு, கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மதுரையில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் திரும்பிய போது, அவரது காா் மீது காலணியை வீசியது கொடுமையான செயல். வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை பாஜக தலைமை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, மாநில ஆளுநா்கள் அதிகார எல்லையை மீறி செயல்படுவதாகத் தெரிகிறது என்றாா் சீமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.