அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

புதுவையில் மேலும் 149 பேருக்கு கரோனா

புதுவையில் வெள்ளிக்கிழமை மேலும் 1492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 6:08 pm

DIN

புதுவையில் வெள்ளிக்கிழமை மேலும் 1492 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 2,379 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 91, காரைக்கால் - 42, ஏனாம் - 9, மாஹே - 7 போ் என மொத்தம் 149 பேருக்கு (6.26 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,071-ஆக அதிகரித்தது. இதில் 1,993 போ் சிகிச்சையில் உள்ளனா்.

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,957-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.19 சதமாக உள்ளது.

இதனிடையே 661 போ் குணமடைந்ததால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,61,121 ஆக உயா்ந்தது. இதுவரை 15,52,190 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.