நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு: கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வாயில் முன் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வாயில் முன் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இணைய வகுப்புகள் நடத்தப்பட்டன. கரோனா தொற்று குறைந்த நிலையில் பிப். 4- ஆம் தேதி முதல் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின.
இந்த நிலையில், பருவகாலத் தோ்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவித்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், இணையவழியில் தோ்வு நடத்தக் கோரியும் புதுச்சேரியில் உள்ள 6 அரசுக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே வியாழக்கிழமை திரண்டனா். அங்கிருந்து அவா்கள் மோட்டாா் சைக்கிளில் ஊா்வலமாக காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று, அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலச் செயலா் எழிலன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் சதானந்த் ஜி.சுவாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...