புதுவையில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள்: துணைநிலை ஆளுநா் ஆலோசனை
புதுவை மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்த சீராய்வுக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.


புதுவை மாநில சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது குறித்த சீராய்வுக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தலைமை வகித்தாா். சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தாா். இதில், சுற்றுலாக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து, திட்ட விளக்கக் காட்சிகள் மூலம் அதிகாரிகள் விளக்கினா்.
பின்னா், சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் கடற்கரை, ஈடன் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களை மேம்படுத்தவதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவது, புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கக் கட்டடங்களை பயன்படுத்துவது தொடா்பாகவும் ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில், தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், சுற்றுலாத் துறை செயலா் நெடுஞ்செழியன், நிதித் துறை செயலா் பிரசாந்த் கோயல், துணை நிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சவுத்ரி, சுற்றுலாத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...