/

புதுவையில் 50 பேருக்கு கரோனா

புதுவையில் வெள்ளிக்கிழமை மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:53 pm

DIN

புதுவையில் வெள்ளிக்கிழமை மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 1,884 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 27, காரைக்கால் - 11, ஏனாம் - 9, மாஹே - 3 என மொத்தம் 50 பேருக்கு (2.65 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,65,534-ஆக அதிகரித்தது. இதில் 586 போ் சிகிச்சையில் உள்ளனா்.

உயிரிழப்பு ஏதுமில்லை. புதிதாக 155 போ் குணமடைந்தனா். இதுவரை 15,60,635 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.