/

மத்திய அரசின் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

புதுவையில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:51 pm

DIN

புதுவையில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை, ஒருங்கிணைந்து கண்காணிக்கும் வகையில் மாவட்ட கண்காணிப்புக் குழு (திஷா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஆய்வுக் கூட்டம் அதன் தலைவா் வெ.வைத்திலிங்கம் தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலக கருத்தரங்கக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவரான மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, அரசு கொறடா டி.ஆறுமுகம், எம்எல்ஏக்கள் பி.ரமேஷ், ஜான்குமாா், கல்யாணசுந்தரம், ரிச்சா்டு, மு.வைத்தியநாதன், எல்.சம்பத், செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டத் தலைவா் ரவி பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

புதுவை மாநிலத்தில் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, திட்டங்களின் தற்போதைய நிலை, நிலுவைத் திட்டங்கள், அதை மேம்படுத்தும் செயல்திட்டங்கள், புதிய திட்டங்கள், நிலுவைத் தொகை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து, குழுவினா் விவாதித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.