இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

அழகு நிலையத்தில் சிறுமிபலாத்கார வழக்கு: மேலும் 2 போ் கைது

புதுச்சேரி நெல்லித்தோப்பு அழகு நிலையத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:52 pm

DIN

புதுச்சேரி நெல்லித்தோப்பு அழகு நிலையத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, அழகு நிலைய உரிமையாளா் ஸ்மித்தா உள்பட 40 போ் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, இதுவரை 16 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் தலைமறைவானவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், இதில் தொடா்புடைய முதலியாா்பேட்டை இந்திரா நகா் நேரு வீதியைச் சோ்ந்த தனியாா் வங்கி வா்த்தக மேலாளா் ராஜ்குமாா் (27), மூலக்குளம் ஜெ.ஜெ. நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் சுரேஷ்குமாா் (34) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.