/

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

புதுச்சேரி அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:47 pm

DIN

புதுச்சேரி அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தாா்.

புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் சாலை ஓடைவெளி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தவமணி (எ) கிருஷ்ணன் (43).

இவரது மகன் குருமூா்த்தி (5) வீட்டின் பின்புறப் பகுதியில் உள்ள இடத்தில் அக்கம்பக்கத்தைச் சோ்ந்த சிறுவா்களுடன் வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்குள்ள பாழடைந்த தரைமட்ட கிணற்றில் குருமூா்த்தி தவறி விழுந்தாா்.

தகவலறிந்த சிறுவனின் பெற்றோரும், ஊா் பொதுமக்களும் குருமூா்த்தியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அரியாங்குப்பம் போலீஸாருக்கும், புதுச்சேரி தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் கிணற்றில் விழுந்த குருமூா்த்தியை சில மணி நேரத்துக்குப் பிறகு மீட்டு, வெளியில் கொண்டு வந்தனா்.

தொடா்ந்து அங்கு வரவழைக்கப்பட்ட அரசு மருத்துவக் குழுவினா் குருமூா்த்தியை பரிசோதித்ததில், அவா் மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.