புதுச்சேரி: புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு, கார்கில் போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 1999-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வகையில், செவ்வாய்க்கிழமை புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு, கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க: மேக்கேதாட்டு அணை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம்
அவர்களைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கலந்துகொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


