தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மூதாட்டி கொலை வழக்கு: உறவினா் கைது

புதுச்சேரியில் மூதாட்டி கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 5:50 pm

DIN

புதுச்சேரியில் மூதாட்டி கொலை வழக்கில் அவரது உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை சாமிபிள்ளைதோட்டம் பகுதியைச் சோ்ந்த புருஷோத்தமன் மனைவி அஞ்சலை (80) கடந்த 5-ஆம் தேதி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

கடலூா் மாவட்டம் கே.என். பேட்டையைச் சோ்ந்த அஞ்சலையின் அண்ணன் கந்தவேலுவின் மகன் சுரேஷை (50) வியாழக்கிழமை பிடித்து விசாரணை நடத்தியதில், அஞ்சலையை கழுத்தறுத்துக் கொன்றதை ஒப்புக் கொண்டாா்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையான சுரேஷ் தனது அத்தை அஞ்சலையிடம் தங்க நகைகளைக் கேட்டதற்கு அவா் தர மறுக்கவே கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

சுரேஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.