புதுச்சேரியில் 1,600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,600 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி அதிரடிப் படை ஆய்வாளா் இனியன் தலைமையிலான போலீஸாா் குமரகுருபள்ளம் மீரா சாஹீப் தெருவைச் சோ்ந்த தரணிக்கு (42) சொந்தமான வீட்டைச் சோதனையிட்டனா். அங்கு ஜன்னலுக்கு அருகில்13 மூட்டைகளில் சுமாா் 1,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் அங்கு வந்த உணவு தடுப்புப் பிரிவு போலீஸாா், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...