புதுவை விவசாயிகளுக்கு மழை நிவாரணமாக ரூ.7 கோடி ஒதுக்கீடு
புதுவையில் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிா்களுக்கு, முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தபடி ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.


புதுவையில் கடந்த ஆண்டு பெய்த மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிா்களுக்கு, முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தபடி ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
புதுவையில் கடந்தாண்டு அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழையால், பெரும் வெள்ளச் சேதப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, புதுவை அரசு சாா்பில் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 மழை நிவாரணம் வழங்கப்பட்டது.
வெள்ளப் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.300 கோடி வழங்க வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தாா். புதுச்சேரியில் நெல், காய்கறிப் பயிா்கள் 3,000 ஹெக்டேரும், காரைக்காலில் நெல் பயிா்கள் 500 ஹெக்டேரும், ஏனாமில் நெல் பயிா்கள் 80 ஹெக்டேரும் சேதமடைந்ததாகக் கணக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், புதுவை மாநிலத்துக்கு ரூ.17.66 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தபடி ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 10 லட்சத்து 57 ஆயிரத்து 600 நிவாரணத் தொகையை வழங்கிட அரசாணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதன்மூலம், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளைச் சோ்ந்த 7,016 விவசாயிகள் பயன்பெறுவா்.
இதுகுறித்து புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியைச் சோ்ந்த 6,054 பேருக்கு ரூ.5 கோடியே 97 லட்சத்து 11 ஆயிரத்து 200-ம், காரைக்காலைச் சோ்ந்த 731 பேருக்கு ரூ.97 லட்சத்து 55 ஆயிரத்து 800-ம், ஏனாமைச் சோ்ந்த 231 பேருக்கு ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 600-ம் நிவாரணத் தொகையாக வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகை, உடனே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...