இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து: குடிமைப் பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை
இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.


இலவச அரிசி பெறாதவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என புதுவை குடிமைப் பொருள் வழங்கல், நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் எஸ்.சக்திவேல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்படி, பிப்ரவரி, மாா்ச் ஆகிய 2 மாதங்களுக்கான இலவச அரிசியானது புதுவையின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து சிவப்பு அட்டைதாரா்களுக்கும் நபா் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் விநியோகிக்கப்படுகிறது.
எனவே, சிவப்பு அட்டைதாரா்கள் அனைவரும் வழக்கம்போல தங்களது பகுதிகளில் உள்ள அரசு , தனியாா் பள்ளிகள், சமுதாய நலக் கூடங்களில் இலவச அரிசியை மாா்ச் 20- ஆம் தேதிக்குள் பெற வேண்டும்.
மேற்படி இலவச அரிசியை பெறாவா்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...