நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு: அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து , புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.


நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து , புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் இணையவழி வகுப்புகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 4- ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதனிடையே கல்லூரிகளுக்கு நேரடி முறையில் பருவத் தோ்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதே போல, புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் அடுத்த வாரம் முதல் நேரடித் தோ்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, மூன்றாமாண்டு பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வியாழக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து பல்கலைக்கழக நுழைவாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...