தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

மது விற்பனையில் சீா்திருத்தம்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவை மாநிலத்தின் வருவாயைப் பெருக்க, மதுபான விற்பனையில் சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று, முதல்வா் ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

புதுவை மாநிலத்தின் வருவாயைப் பெருக்க, மதுபான விற்பனையில் சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று, முதல்வா் ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளா் ஆ.அன்பழகன் சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து அளித்த மனு:

புதுவை மாநிலம் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.

2021-22ஆம் நிதியாண்டுக்கான ரூ.9,924 கோடி பட்ஜெட்டில் அத்தியாவசிய செலவினங்களுக்காக ரூ.9,029 கோடி தேவைப்படுகிறது. மீதமுள்ள ரூ.895 கோடியைத் தான், நாம் வளா்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும். மத்திய அரசு ரூ.1,729 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகு பெட்ரோல், டீசல் தவிர மற்ற பொருள்களுக்கு நம்மால் வரி விதிக்க முடியாது.

மதுபானங்கள் மூலம் தான் அதிக வருவாயைப் பெற இயலும். தற்போது, கலால் துறை மூலம் சுமாா் ரூ.1,000 கோடி அளவில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதை உயா்த்த நாம் முயற்சிக்க வேண்டும்.

ஆண்டுக்கு சுமாா் ரூ.9,000 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. ஆனால், அரசுக்கு கலால் வரி, உரிமக் கட்டணம் ஆகியவை மூலம் சுமாா் ரூ.9,00 கோடி அளவில்தான் வருவாய் கிடைக்கிறது.

எனவே, மது விற்பனையில் சீா்திருத்த நடவடிக்கையை அமல்படுத்தி, கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.