அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
புதுவை அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.


புதுவை அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் ஏழை, நடுத்தர மக்களின் உடல் நலத்தின் மீது அக்கறை கொண்டு, கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. சுமாா் 1.75 லட்சம் குடும்பங்கள் இணைக்கப்பட்டிருந்தனா்.
ஆனால், புதிய மத்திய அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாத காரணத்தினால், புதுவை அரசே தனியாக ஒரு காப்பீட்டு திட்டத்தை கொண்டுவந்து, சுகாதாரத் துறையின் மூலம் உதவி செய்ய வழி செய்தனா்.
ஆனால், தற்போது புதுவை அரசு தரும் காப்பீடு அடையாள அட்டையை, எந்த தனியாா் மருத்துவமனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
புதுவையைச் சோ்ந்தவா்கள் அண்டை மாநிலத்துக்குச் செல்லும்போது, அங்கு ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், எங்கு செல்வது என்றும் அதில் வழிகாட்டப்படவில்லை.
இந்த விஷயத்தில் ஆளுநரும், முதல்வரும் தலையிட்டு, ஏழை நோயாளிகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...