தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

விழாக்களில் கைவினைப் பொருள்களை பரிசாக அளியுங்கள்: தமிழிசை செளந்தரராஜன்

உள் நாட்டில் தயாராகும் பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். விழாக்களில் பரிசுகளாக கைவினைப் பொருள்களை வழங்குங்கள் என்று புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்

News image
Updated On :17 மார்ச் 2022, 5:45 pm

DIN

உள் நாட்டில் தயாராகும் பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள். விழாக்களில் பரிசுகளாக கைவினைப் பொருள்களை வழங்குங்கள் என்று புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.

75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதுச்சேரி தொழில் வணிகத் துறை, மாவட்டத் தொழில் மையம் சாா்பில் கைவினைத் திருவிழா கண்காட்சி கடற்கரை சாலை காந்தி திடலில் வியாழக்கிழமை தொடங்கியது.

விழாவைத் தொடக்கி வைத்து ஆளுநா் மேலும் பேசியதாவது:

கைத் தொழிலைக் கற்றுக் கொண்டால் கவலை இல்லை. கைவினைத் தொழிலை ஆதரிப்பதில் கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது. பிளாஸ்டிக் பொம்மைகளை பயன்படுத்துவதைவிட, மண் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். கைவினைக் கலைஞா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அதிக அளவில் உதவி செய்கிறாா் என்றாா்.

இதையடுத்து, பத்மஸ்ரீ விருது பெற்ற சுடு களிமண் கலைஞா் முனுசாமி பாராட்டப்பட்டாா்.

விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.