நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜோ, ஆண்பாவம் பொல்லாதது ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் கவனிக்கப்படும் நடிகராக ரியோ ராஜ் வளர்ந்துள்ளார். இன்றைய கால இளைஞர்களுக்கான காதல் கதைகளாகத் தேர்ந்தெடுக்கிறார்.
தற்போது, ராம் அண்ட் லீலா என்கிற திரைப்படத்தில் நடித்து வருவதுடன் புதிய திரைப்படமொன்றைத் தயாரித்தும் வருகிறார்.
இந்த நிலையில், ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் 7-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் பிகே இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். அறிவிப்பு போஸ்டரில் இப்படத்திற்கு, ‘மேடி’ எனப் பெயரிட்டுள்ளதையும் அறிவித்துள்ளனர்.

மேலும், போஸ்டரில் ஐபிஎல்லின் சென்னை, பெங்களூரு அணிகளின் சீருடை காட்டப்படுகிறது. நாயகனுக்கு சச்சின் என்றும் நாயகிக்கு அஞ்சலி என்றும் பெயரிட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர்.
Summary
actor rio raj's maddy movie poster out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியோ ராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் அறிமுக போஸ்டர்!

தயாரிப்பாளரான நடிகர் ரியோ ராஜ்..! படத் தலைப்பு விடியோ!
ஃபால் - 2 போஸ்டர்!

சந்தீப் கிஷனின் புதிய படம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

