புதுச்சேரி பஞ்சு ஆலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் உள்ள பழமையான சுதேசி, பாரதி மில்களை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு ஆலைகளையும் தொடர்ந்து
புதுச்சேரி பஞ்சு ஆலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பழமையான சுதேசி, பாரதி மில்களை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு ஆலைகளையும் தொடர்ந்து நடத்திட புதுவை அரசு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு AITUC, INTUC, CITU, AICCTU, MLF ஆகிய சங்கங்களின் சார்பில் கோரிக்கை ஆர்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி சங்கத் தலைவர் அபிஷேகம் தலைமை வகித்தார். சிஐடியு தலைவர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், எம்.எல்.எப். கபிரியேல் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிற்சங்கத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

புதுச்சேரியில் பழமையாக உள்ள சுதேசி, பாரதி ஆகிய பஞ்சு ஆலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நிர்வாகம் சார்பில் அண்மையில் அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளனர். இந்த பஞ்சு ஆலையை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும், பாரம்பரியமிக்க பஞ்சு ஆலையை மீண்டும் இயக்கவும், பஞ்சு ஆலையில் உள்ள இயந்திரங்களை சீரமைத்து இயக்கவும், மத்திய-மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தொழிற்சங்க நிர்வாகிகள், முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com