அரசு விழாவில் அமைச்சரிடம் பொதுமக்கள் கோரிக்கை
புதுச்சேரி அருகே நடைபெற்ற நலத் திட்ட பணி தொடக்க விழாவில் அமைச்சா் ஏ.நமச்சிவாயத்திடம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்


புதுச்சேரி அருகே நடைபெற்ற நலத் திட்ட பணி தொடக்க விழாவில் அமைச்சா் ஏ.நமச்சிவாயத்திடம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குள்பட்ட கொடாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.31.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் பணியைத் தொடக்கிவைத்தாா்.
அப்போது, விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீா் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
சந்தைப்புதுக்குப்பத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவா் கட்டும் பணியை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தொடக்கிவைத்தாா்.
விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் அரசுப் பள்ளியில் மழலையா் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். மேலும், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...