புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விடுதலைத் திருநாள் விழாவில்  முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
என்.ரங்கசாமி
என்.ரங்கசாமி

புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விடுதலைத் திருநாள் விழாவில்  முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  1,056 பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு அந்தந்தத் துறை சார்பில் நாளை நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும். 

மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வரும் காலங்களில் தொடரும். புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 2020-21ஆம் ஆண்டில் சுமார் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. 

இது , 2021-22ஆம் ஆண்டில் சுமார் ரூ. 37 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.39 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டுகளாக தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com