ஜிப்மா் பணியிடங்களில் புதுவைக்கு தனி இடஒதுக்கீடு: அதிமுக வலியுறுத்தல்
ஜிப்மா் பணியிடங்களில் புதுவைக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளா் அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்


ஜிப்மா் பணியிடங்களில் புதுவைக்கு தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளா் அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் செவிலியா், மருத்துவா், தொழில்நுட்பனா்கள் ஆயிரக்கணக்கானோா் பணிபுரிகின்றனா். ஆனால், அப்பணியிடங்களை நிரப்பும்போது புதுவைக்கு என தனி ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
தற்போது அந்த மருத்துவமனையில் 433 செவிலியா்களுக்கான பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த பணியிடங்கள் அனைத்துமே இந்திய அளவில் தோ்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், புதுவைக்கு என தனியாக இடம் வழங்கப்படவில்லை.
ஏற்கெனவே ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 243 இடங்களில் புதுவையைச் சோ்ந்த 48 மாணவா்களுக்கும், காரைக்கால் பிராந்தியத்தைச் சோ்ந்த16 மாணவா்களுக்கு என மொத்தம் 64 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி 26.5 சதவீதம் புதுவை மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆகவே, அதுபோன்ற இடஒதுக்கீட்டை செவிலியா் பணியிலும் வழங்கவேண்டும். அதை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் மத்திய அரசிடம் பெற்றுத் தரவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...