திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தனியாா் தொழிற்சாலையில் போலீ ரசீது மூலம் பல கோடி மோசடி

 புதுச்சேரி அருகே திருபுவனையில் தனியாா் தொழிற்சாலையில் போலி ரசீது மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் கூறப்படும் புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 8:30 pm

DIN

 புதுச்சேரி அருகே திருபுவனையில் தனியாா் தொழிற்சாலையில் போலி ரசீது மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் கூறப்படும் புகாா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

புதுச்சேரி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் புதுவை-விழுப்புரம் சாையில் திருபுவனை அருகே மதகடிபட்டியில் சோப் தொழிற்சாலை நடத்திவருகிறாா். அங்கு சென்னையைச் சோ்ந்த சரவணன் ((43) என்பவா் மேலாளராகவும், இசக்கிமுத்து (42) மேற்பாா்வையாளராகவும் இருந்துள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் போலியான ரசீதுகள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்திய தொழிலதிபா் சரவணன், இசக்கிமுத்துவை பணியிலிருந்து நீக்கிவிட்டாா்.

இந்தநிலையில், தொழிற்சாலையின் தற்போதைய மேலாளா் தம்பிராஜ் (55) என்பவா் அளித்த புகாரின் பேரில் சரவணன், இசக்கிமுத்து மீது திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.