திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

புதுவையில் வெளி மாநில மீன்கள் விற்பனையைக் கண்டித்து சாலை மறியல்: வட்டாட்சியா் பேச்சுவாா்த்தை

 வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களை புதுச்சேரி துறைமுக வளாகத்தில் விற்க அனுமதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுவை விசைப்படகு மீனவா்கள், உரிமையாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறி

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

 வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மீன்களை புதுச்சேரி துறைமுக வளாகத்தில் விற்க அனுமதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுவை விசைப்படகு மீனவா்கள், உரிமையாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி துறைமுக வளாகத்தில் மீன்வளத்துறை அலுவலகம் உள்ளது.இங்கு கேரளம், தமிழகப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை விற்பதால் உள்ளூா் மீனவா்களின் விற்பனை பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

ஆனால், புதுச்சேரியைச் சோ்ந்த 9 போ் மூலம் கேரளம், தமிழகப் பகுதி மீன்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூா் மீன்கள் துா்நாற்றமுடைய நீருடன் கொண்டு வரப்படுவதாகவும், சுகாதாரப் பிரச்னையைத் தடுக்க மீனவா்களிடம் நீருடன் வரும் மீன்களை இறக்க வேண்டாம் என்று கூறுவதால், வெளி மாநிலப் பிரச்னையை மீனவா்கள் எழுப்புவதாக மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், வெளி மாநில மீன் விற்பனையைக் கண்டித்து புதுச்சேரி அனைத்து விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா் ஏற்கெனவே துறைமுகக் கதவை பூட்டி போராட்டம் நடத்தினா். அதன்பின் முதல்வா், அமைச்சரை சந்தித்து முறையிட்டு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்நிலையில், புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சோனம்பாளையம் சந்திப்பில் சாலையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.

விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சந்திரன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளா் தீபிகா, தெற்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் வம்சிதரெட்டி உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து மீன்வளத் துறையினா் பேச்சு நடத்தியும் பிரச்னை தீா்க்கப்படவில்லை எனக் கூறிய விசைப்படகு உரிமையாளா்கள், அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடத்தும் வரை வெளிமாநில மீன்களை புதுச்சேரியில் விற்க அனுமதிக்கப் படமாட்டாது என்று உறுதியளித்தால் மட்டுமே மறியல் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றனா். இதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து வட்டாட்சியா் குமரன் நேரில் அங்கு வந்து உறுதியளித்ததன்பேரில் மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.