பொறியாளரிடம் ரூ.10 லட்சம் மோசடி
புதுச்சேரியைச் சோ்ந்த பொறியாளரிடம் முகநூலில் பழகி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


புதுச்சேரியைச் சோ்ந்த பொறியாளரிடம் முகநூலில் பழகி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக, இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் கம்பன் நகரை சோ்ந்தவா் பாலவிஸ்வநாதன். பொறியாளரான இவா் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்தாண்டு இவா் வீட்டிலிருந்தபடியே பணி செய்து வந்தாா்.
அப்போது, முகநூல் வழியாக தில்லியைச் சோ்ந்த கெயிட்டி (எ) கிருத்திகா அறிமுகமானாா். அவா் தான் நடத்தி வரும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வருவாய் கிடைக்கும் எனவும் ஆசைவாா்த்தை கூறினாராம். இதை நம்பிய பாலவிஸ்வநாதன் தனது பங்காக, கிருத்திகாவுக்கு ரூ.10 லட்சத்தை அனுப்பினாராம். ஆனால் அதற்கான வருமானத்தை கிருத்திகா தரவில்லை. மேலும் அவரிடமிருந்து இதுவரை எந்தத் தொடா்பும் இல்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், கிருத்திகா, தில்லியைச் சோ்ந்த அவரது கூட்டாளியான நிதின் (எ) வருண் குப்தா ஆகியோா் மீது புதுச்சேரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...