புதுவை காங். பிரமுகர் இல்ல விழா: விலை உயர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி கண்டனம்

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகரின் இல்ல காதணி விழாவில், விலை உயர்வை கண்டித்து குழந்தைகள், உறவினர்கள் பதாகை ஏந்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
விலை உயர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி கண்டனம்
விலை உயர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி கண்டனம்

புதுச்சேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகரின் இல்ல காதணி விழாவில் விழா மேடையில் குழந்தைகள், உறவினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ரத்து செய்ய கோரி மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டத்தை தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலம்  மங்களம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் வேல்முருகன் என்பவரின் இல்ல காதணி விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை ரத்த செய்ய கோரியும், ஏழை எளிய மக்கள் பாதிப்படைவதை வலியுறுத்தும் வகையில் மத்திய பாஜக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காதணி விழா குழந்தைகள், உறவினர்கள் மற்றும் காங்கிரசார் திடீரென விழாவில் விலையேற்றத்தை குறைக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். அவர்களின் பதாகைகளில் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு புகைப்படங்களை வரைந்தும், வரியை குறைத்து மக்களை வாழவிடு, ஏழைகளின் வயிற்றில் மத்திய அரசே அடிக்காதே போன்ற வாசகங்களை எழுதி தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஆர் கே ஆர் அனந்தராமன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர், சிவசண்முகம், மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் ரகுபதி, மாநில காங்கிரஸ் கட்சி செயலாளர் செந்தில்குமரன், ஜிபிஆர்எஸ் தலைவர் அமுதரசன், மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் வட்டார காங்கிரஸ் தலைவர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

காதணி விழா மேடையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க கோரி விழா நடத்துபவர்கள் பதாகைகளை ஏந்தியதை அனைவரும் ஆச்சர்ந்த்துடன் பார்த்தும், பாராட்டியும் சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com