புதுவை முதல்வருக்கு பாதுகாப்பு குறைபாடு விவகாரம்: ஆளுநர் அலுவலகம் முற்றுகை

புதுவை முதல்வருக்கு பாதுகாப்பு குறைபாடு காரணமான காவல்துறை அதிகாரியை கண்டித்து, ஆளுநர் அலுவலகம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை முதல்வருக்கு பாதுகாப்பு குறைபாடு விவகாரம்: ஆளுநர் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி: புதுவை முதல்வருக்கு பாதுகாப்பு குறைபாடு காரணமான காவல்துறை அதிகாரியை கண்டித்து, ஆளுநர் அலுவலகம் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே திருக்காமீஸ்வரர் கோயிலில் தேரோட்ட திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியை, அமைச்சர் நமச்சிவாயத்தின் காவல் பாதுகாப்பு அதிகாரி ராஜசேகர் எதிர்பாராத விதமாக முதல்வர் மீது கையால் தள்ளியதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வரின் பாதுகாப்புக்கு கேள்விக்குறி ஏற்பட்டதாக பல்வேறு அமைப்பினர் புகார் எழுப்பினர்.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு பணியாளர் நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சட்டப்பேரவை அலுவலகம் முன்பிருந்து திரண்டு சென்று, 25-க்கும் மேற்பட்டோர் திடீரென புதுவை ஆளுநர் மாளிகை வாயில் பகுதியில் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படுத்திய, அவரை தாக்க முயன்ற காவல் பாதுகாவலர் ராஜசேகரன் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தியதாக ஆளுநரை கண்டித்தும் முழக்கமிட்டனர். தகவலறிந்து வந்த பெரியகடை காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர், ஆளுநர் மாளிகை வாயில் கதவை முற்றுகையிட்ட சரவணன் உள்ளிட்ட 25 பேரை அதிரடியாக தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆளுநர் அலுவலகம் முன்பு ஏற்பட்ட இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com