புதுச்சேரியில் ரசிகர்களுடன் சுயபடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் ஹரி, அருண் விஜய் 

புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி ஆகிகோயர் சுயபடம் எடுத்துக்கொண்டனர்.
புதுச்சேரியில் ரசிகர்களுடன் சுயபடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் ஹரி, அருண் விஜய் 

புதுச்சேரியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி ஆகிகோயர் சுயபடம் எடுத்துக்கொண்டனர்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வெளியாக உள்ள யானை திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சி காமராஜர் சாலையில் உள்ள ஜீவா ருக்மணி திரையரங்கில் இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இதனை யானை படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் கதாநாயகர் நடிகர் அருண்விஜய் ஆகியோர் தியேட்டரில் முன் நின்று துவக்கி வைத்ததோடு அங்கிருந்த ரசிகர்களிடம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாகி உள்ள இப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். 

தொடர்ந்து ரசிகர்களுடன் சுயபடம் மற்றும் போட்டோ எடுத்துக்கொண்டு அவர்கள் உடனடியாக சென்னை புறப்பட்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com