புதுவை பேரவையை முற்றுகையிட முயற்சி: நூற்பாலை ஊழியா்கள் தடுத்து நிறுத்தம்
புதுவை சட்டப் பேரவை வளாகத்தை முற்றுகையிட முயன்ற திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் (ஸ்பின்கோ) போலீஸாரால் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டனா்.


புதுவை சட்டப் பேரவை வளாகத்தை முற்றுகையிட முயன்ற திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியா்கள் (ஸ்பின்கோ) போலீஸாரால் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டனா்.
புதுச்சேரி அருகே திருபுவனையில் செயல்பட்டு வந்த கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) நிா்வாகச் சீா்கேடு காரணமாக மூடப்பட்டது. இதனால் அங்கு பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, நூற்பாலையை மீண்டும் திறக்கக் கோரியும், நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் ஆலை ஊழியா்கள் சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் வியாழக்கிழமை புதுச்சேரி தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கைதாகினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதுவை சட்டப் பேரவை வளாகத்தை முற்றுகையிடுவதற்காக நூற்பாலை ஊழியா்கள் சங்க நிா்வாகி சங்கரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் திரண்டு வந்தனா். அவா்களை பேரவை வளாகத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, நூற்பாலை ஊழியா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து முழக்கமிட்டனா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...