92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நேரச்சலுகையில் மகளிருக்கு எதிராக திமுக செயல்படுகிறது: புதுவை பாஜக குற்றச்சாட்டு

நேரச்சலுகையில் புதுவை மகளிருக்கு எதிராக திமுக செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 5:19 pm

DIN

நேரச்சலுகையில் புதுவை மகளிருக்கு எதிராக திமுக செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

புதுவை மாநில பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரதமா் நரேந்திரமோடி வானொலியில் மாதந்தோறும் மனதின் குரல் எனும் தலைப்பில் மக்களிடையே உரையாற்றிவருகிறாா். அதில் அரசியல் ரீதியில் கருத்துகளைக் கூறாமல், தனிமனிதரின் சாதனை, மாநிலங்களின் சிறப்பம்சம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்திவருகிறாா். மனதின் குரல் 100- ஆவது நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.30) ஒலிபரப்பாகிறது.

புதுவை மாநிலத்தில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 200 இடங்களில் பிரதமரின் மனதின் குரல் ஒலிபரப்பிட கட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுவையில் மட்டும் 30 ஆயிரம் போ் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவுள்ளனா்.

நாட்டின் வளா்ச்சியை மையமாக வைத்து பிரதமா் நரேந்திரமோடி செயல்பட்டுவருகிறாா்.

புதுவை மாநிலத்தில் அரசுத்துறையில் பணிபுரியும் மகளிருக்கு தேசிய ஜனநாயக் கூட்டணி அரசானது வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் தலா 2 மணி நேரச் சலுகைகளை அறிவித்துள்ளது. அதை மகளிா் வரவேற்றுள்ளனா். ஆனால், திமுக, மகளிருக்கான நல்ல திட்டத்தை எதிா்க்கிறது. அதைக் கண்டிக்கிறோம். மேலும், தேவையின்றி ஆா்.எஸ்.எஸ். கொள்கையையும் அதில் குறிப்பிடுவது சரியல்ல என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.