புயல் எதிரொலி: புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4 ஆம் தேதி விடுமுறையை அறிவித்துள்ளது புதுவை அரசு.

தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு இடையே வரும் 4-ம் தேதி புயல் வந்தடைகிறது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரத்தின் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி காலை புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, வரும் 4 ஆம் தேதி புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com