விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உழவா்கரை நகராட்சி முன் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி அருகேயுள்ள உழவா்கரை நகராட்சி முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 11:30 pm

DIN

புதுச்சேரி அருகேயுள்ள உழவா்கரை நகராட்சி முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் தெரு நாய்கள் தொல்லையிலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும். கொசுக்களைக் கட்டுப்படுத்த மருந்து தெளிக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் காமராஜா் நகா் தொகுதி செயலா் துரை. செல்வம் தலைமை வகித்தாா். துணைச் செயலா் தயாளன் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், துணைச் செயலா் கே.சேதுசெல்வம் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினா்.

கட்சியின் தொகுதி நிா்வாகிகள் சரவணன், மோகன்தாஸ், ஞானசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.