நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை!

புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் விரக்தியடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் இளைஞர் தற்கொலை!

புதுச்சேரியில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றதால் விரக்தியடைந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே பங்கூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது28). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து கடந்த 15 நாள்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும் திருமண நாளும் குறிக்கப்பட்டது. 

இந்த நிலையில் திருமணம் திடீரென நின்று போனதாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரன் மன விரக்தியில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனாலும் திருமணம் நின்று போனதால் அதனை ஏற்க முடியாமல் பாஸ்கரன் மனவேதனையடைந்தார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த பாஸ்கரன் நேற்று இரவு கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம் அருகே கெண்டியான்குப்பம் ரயில்வே கேட்டுக்கு சென்றார். 

அப்போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன் பாஸ்கரன் பாய்ந்தார். இதில் தூக்கிவீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த ரயில் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி அதே ரயிலில் பாஸ்கரனை மீட்டு கண்டமங்கலம் ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தார். 

பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக பாஸ்கரனை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் விழுப்புரம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com