புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் தொடங்கியுள்ளது.
புதுவை சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
மத்திய அரசு அறிவுறுத்தல்படி, இந்த நடைமுறையை மாற்றி இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் அண்மையில் கூடியது. இதற்கான திட்டக்குழு கூட்டத்தில் பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது கடந்த பட்ஜெட்டைவிட ரூ. 1000 கோடி அதிகம்.
வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அதன்படி இன்று (மார்ச் 9ம் தேதி) காலை 9.45 மணிக்கு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் தமிழிசை உரையாற்ற புதுச்சேரி சட்டப்பேரவைக்கு வந்தார்.
இதையடுத்து ஆளுநர் தமிழிசைக்கு அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. பேரவைத்தலைவர் செல்வம், பேரவைச் செயலர் தயாளன் ஆகியோர் ஆளுநரை வரவேற்று மையமண்டபத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பேரவைத்தலைவர் இருக்கையில் ஆளுநர் தமிழிசை அமர்ந்தார். அவர் அருகே பேரவைத்தலைவர் செல்வம் அமர்ந்தார். பின்னர் பாரதி வரிகளை வாசித்து ஆளுநர் தமிழிசை உரையாற்றினார்.
அப்போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை நேரு எழுந்து நின்று கையில் இருந்த போஸ்டரை காண்பித்தார். அதில், "மத்திய அரசே புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநர் நியமித்துடு, வேண்டாம் வேண்டாம் இரவல் ஆளுநர் வேண்டாம்" என்று எழுதியிருந்தது
அதை பார்த்த பேரவைத் தலைவர் செல்வம் அமரக்கூறினார். ஆனால் அவர் நெடுநேரம் நின்றிருந்தார். பின்னர் பேரவையிலிருந்து எம்எல்ஏ நேரு வெளிநடப்பு செய்தார்
வருகிற 13-ஆம் தேதி முதல்வா் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ள நிலையில், முழு நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் குறைந்த வெள்ளி! தங்கம்?

கடற்கரை - பரங்கிமலை ரயில் சேவை அட்டவணை இதோ!

ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!

தமிழில் உயர்கல்வி: என்ன சிக்கல்? என்ன தீர்வு?
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

