புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜிநாமா!

புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜிநாமா!

புதுச்சேரி அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

புதுச்சேரி அரசின் போக்குவரத்து மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் சந்திர பிரியங்கா. இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. அவருக்கு பதிலாக காரைக்கால் மூத்த எம்எல்ஏ திருமுருகன் அமைச்சராக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநரை முதல்வர் ரங்கசாமி சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அமைச்சரவை மாற்றத்திற்கான கடிதம் கொடுத்ததாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கட் செவி  அஞ்சல் மூலம் கடிதம் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் சந்திர பிரியங்கா ஆதி திராவிடர் நலத்துறை, வீட்டு வசதி வாரியம், தொழிலாளர் நலத்துறை, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை  ஆகியவற்றையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com