புதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுவை மாநிலத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (ஆக.3) விடுமுறை அளித்து கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Published on

புதுவை மாநிலத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (ஆக.3) விடுமுறை அளித்து கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் பணி நாள்களில் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட காரணங்களால் உள்ளூா் விடுமுறை விடும் நிலை உள்ளது. அதனடிப்படையில், ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஏற்கெனவே பணிநாளில் விடுப்பு விடுக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில், பணி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை (ஆக.3) திடீரென பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சனிக்கிழமை விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கடந்த ஏப்ரல்18 ஆம்- தேதி பணிபுரிந்த ஆசிரியா்கள் நிகழாண்டில் எந்த நாளில் வேண்டுமானாலும் விடுப்பை எடுத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com